|
பகவான் கிருஷ்ணர் உடல் நலம் குன்றியவர்களுக்கு தரிசனம் அளிக்கும் பொருட்டு வீதி உலா வந்தார். அவருக்கு எல்லோரும் பழம், பூவுடன் கற்பூர ஆரத்திக் காட்டினர். ஆனால், ஒருவர் பெரியவர் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வரவேயில்லை, அவரை கிருஷ்ணர் அழைத்து, நீ ஏன் எனக்கு ஒன்றும் படைக்கவில்லை? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், எல்லாமே நீ கொடுத்தவைதானே? உன்னிடம் இல்லாததைத்தானே நான் உனக்குப் படைக்க வேண்டும்? என்றார். அதற்கு பகவான், என்னிடம் இல்லாதது எது? என்று வினவுகிறார். பகவானே, பிருந்தவானத்தில் கோபிகைகளுடன் நீ சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது, உன் மனதை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆதலால், உன் மனம் உன்னிடத்தில் இல்லை. அதற்குப் பதில் நான் என் மனதை உனக்குக் கொடுக்கிறேன். என்கிறார். பெரியவர். பகவானால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. |
|
|
|