|
செல்வந்தர் ஒருவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைக் காண வந்தார். சுவாமி! கடவுளுக்காக உலக இன்பங்களைத் துறந்த தாங்கள் மிகப்பெரும் துறவி! என்று புகழ்ந்தார். நீங்கள்தான் என்னைவிடப் பெரிய துறவி என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னதும், புரியாமல் பார்த்தார் அந்த செல்வந்தர். அதைக்கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர், உலக இன்பங்களுக்காக, கடவுளையே நீங்கள் துறந்து வீட்டீர்களே! அதனால்தான் சொல்கிறேன். நீங்கள்தான் பெரிய துறவி என்றார். உண்மை புரிந்து மவுனமானார் செல்வந்தர். |
|
|
|