|
காசி யாத்திரை சென்ற குமரகுருபரர், கங்கைக் கரையில் மடம் ஒன்று அமைக்க எண்ணினார். அப்போது (17 ம் நூற்றாண்டு) மொகாலய மன்னரின் ஆட்சி அங்கிருந்தது. காசி உள்ளிட்ட பகுதியை நவாப் தாரா ஷிக்கோஹ் என்பவர் நிர்வகித்தார். அவரைச் சந்திக்க விரும்பிய குமரகுருபரர், தன் தவசக்தியால் சிங்கம் ஒன்றை வசப்படுத்தினார். அதன் மீதேறி புறப்பட்டார். அவரைக் கண்ட நவாப் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்தாலும், ஏதும் பேச முடியவில்லை. காரணம் குமரகுருபரருக்கு இந்தி தெரியாது. இக்கட்டான இந்நிலையில் கலைவாணியை தியானித்து சகல கலாவல்லி மாலை என்னும் பாடல் பாடினார். மனம் குளிர்ந்த தேவியும், குமரகுருபரருக்கு இந்தி பேசும் புலமை அளித்து அற்புதம் நிகழ்த்தினாள். அதன் பின் நவாப்பிடம், இந்தியில் பேசி மடம் கட்டுவதற்குரிய இடத்தை மானியமாக பெற்றார் குமரகுருபரர். கங்கைக் கரையில் கேதார கட்டத்தில் இம்மடம் உள்ளது. |
|
|
|