|
குருநாதர் ஒருவர் தினமும் காலையில், கடவுளே! இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வேண்டும்,” என்றும், இரவில், இந்த நாள் சிறப்பாக அமைந்தது. எங்களுக்கு உணவளித்த கடவுளுக்கு நன்றி,” என்றும் சொல்லி பிரார்த்தனை செய்வார். இதற்கான காரணத்தை சீடர்கள் கேட்டனர். “ மனிதன் நன்றி மறக்கக் கூடாது. அதனால் தான், தினமும் இரவு கடவுளுக்கு நன்றி சொல்லி பிரார்த்திக்கிறேன்,” என்று விளக்கமளித்தார் குரு. தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் தனக்கு அளிக்கும் பழங்களை மட்டுமே குருநாதர் சாப்பிடுவார். ஒருமுறை சீடர்கள் அவரை சோதிக்க எண்ணினர். “பழங்களை குருவிடம் கொடுக்காமல், அவரை பட்டினி போட்டால் என்ன சொல்லி பிரார்த்திக்கிறார்” என்று கேட்க விரும்பினர். மறுநாள் குருநாதருக்கு ஒரு பழம் கூட அளிக்கவில்லை. “குருநாதா! இன்று ஒரு பக்தர் கூட உங்களைக் காண வராததால், சாப்பிட பழம் இல்லை,” என்று பொய் கூறினர். குருநாதர் அதைப் பொருட்படுத்தவில்லை. சோர்வாக இருந்த அவர் இரவில், “கடவுளே.... இந்த நாள் சிறப்பாக அமைந்தது. இன்று பசியைக் கொடுத்ததற்கு நன்றி,” என சொல்லி விட்டு தூங்கப் புறப்பட்டார். இறைவன் எதைக் கொடுத்தாலும், எல்லா வற்றையும் ஒன்று போல் பார்க்கும் அவரது மன வலிமை கண்ட சீடர்கள் வெட்கப்பட்டனர்.
|
|
|
|