|
கர்நாடகாவில் வசித்த மகான் வியாசராஜரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், வாழைப்பழங்களை கொடுத்தார். அவற்றை சீடர்களுக்கு வழங்கிய வியாசராஜர், “யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து பழத்தை சாப்பிடுங்கள்,” என்றார். குரு ஏன் இப்படி சொல்கிறார் என புரியாத சீடர்கள், மறைவிடம் நோக்கி ஓடினர். கனகதாசர் என்ற சீடர் மட்டும், தயங்கி நின்றார். வியாசராஜர், “கனகதாசா! ஏன் நிற்கிறாய்? ஏதாவது மறைவிடம் நோக்கி ஓடு,” என சொன்னார். “குருநாதரே! மனிதர்களின் கண்ணில் படாமல் வேண்டுமானால் ஒளிய முடியும். ஆனால், கடவுளின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாதே? நான் பழத்தை சாப்பிடுவதை அவர் பார்க்கத்தானே செய்வார்,” என்றார் பணிவுடன். இது கேட்ட வியாசராஜர் மனம் நெகிழ்ந்தார். “கனகதாசா....கடவுள் எங்கும் இருப்பதை நீ உணர்ந்து விட்டாய். உனக்கு அவரின் அருள் பூரணமாக கிடைக்கும்,” என்று வாழ்த்தினார். பின்னாளில், இந்த சீடர் கன்னட மொழியில் பக்தி கீர்த்தனைகள் பாடி புகழ் பெற்றார். |
|
|
|