|
ஒரு பணக்காரர் தன் வீட்டைப் பாதுகாக்க நாய் வளர்த்தார். தினமும் மாமிச சாப்பாடு. அதுவும், ஒருவரைக் கூட வீட்டுக்குள் அனுமதிக்காமல் கடுமையாகக் காவல் காத்தது. ஒரு கட்டத்தில், நாய் தளர்ந்து விட்டது. பணக்காரர் அதை வெளியே துரத்தி விட்டார். இன்னும் சில நாட்களில் புதுநாய் வாங்கி விடலாம் என நினைத்தார். இதற்குள், அந்த வீட்டில் நாய் இல்லாதது பற்றி தகவலறிந்த திருடர்கள் உள்ளே புகுந்து பணத்தைக் கொள்ளையடித்து சென்று விட்டனர். தன் பழையநாய் வீட்டில் இருந்திருந்தால் கூட, இந்த சம்பவம் நடந்திருக்காதே என பணக்காரர் வேதனைப்பட்டார். நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது. நன்றி மறந்தவர்க்கு பேரிழப்பு ஏற்படும், சரிதானே! |
|
|
|