|
விறகு வெட்டும் தொழிலாளி ஒருவன், ஒரு துறவியை சந்தித்தான். சுவாமி! சிறுவயது முதல் மரம் வெட்டுகிறேன். என் வாழ்வில் ஏதாவது மாற்றம் ஏற்படாதா? என கேட்டான். வருந்தாதே! எப்போதும் முன்னேறு மேலே! என உரக்கச் சொல்லிக் கொண்டே இரு, என்று ஆசியளித்தார். துறவி சொன்ன வார்த்தை, அவன் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. மறுநாள், வழக்கமாக வெட்டும் இடத்தை விட்டு, காட்டிற்குள் அதிக தூரம் சென்றான். அங்கு சந்தன மரங்களை கண்டான். அதை விற்று பணக்காரன் ஆனான். சில காலம் கழித்து, இன்னும் முன்னேறிச் சென்றான். ஒரு நதிக்கரையில் வெள்ளிச் சுரங்கம் இருப்பதைக் கண்டான். தன் பக்கம் அதிர்ஷ்டம் வந்ததை எண்ணி மகிழ்ந்தான். இன்னும் முன்னேறிப் போனான். அங்கு தங்கச் சுரங்கம் இருந்தது. பெரிய நகைக்கடையை தொடங்கினான். லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக அவனிடம் குடியேறியது. இந்தக் கதை குறித்து மகான் ராமகிருஷ்ணர், இந்த விறகு வெட்டி போல நாம் கடவுளிடம் கேட்டது கிடைத்ததும் நின்று விடாமல் மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும். கடவுளின் சிந்தனையில் திளைக்கும் போதுதான், நாலாபுறத்திலும் இருந்து நன்மைகள் நம்மைத் தேடி வரும், என்றார். |
|
|
|