Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கங்கை தந்த வளையல்
 
பக்தி கதைகள்
கங்கை தந்த வளையல்

கங்கை கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன் தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி, தண்ணீரைத் தொட்டால் கொன்று விடுவார்களே, தீட்டு பட்டுவிடுமாம், சர்வ பாவங்களையெல்லாம் போக்கும் கங்கை அந்தத் தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில். ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவார். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார் எவ்வளவு பாக்கியசாலி அவர் என்று தூர இருந்தே இரு கரம் கூப்பி அந்த கிழவன் வேண்டுவான். அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். ஒரு நாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதைக் கிழவனிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார். நன்றாக ரிப்பேர் செய்து கொடுத்தான். அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே.

அவன் வணங்கி “சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன் நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான சிறிய உதவி செய்தது என பாக்யம் ”. உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது? நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்கிறார் அந்த பண்டிதர். ஐயா இந்த ஏழைக்கு ஒரு உதவி செய்வீர்களா? இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும் வணங்கின்றேன். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா? என்ன சொல்கிறாய். இந்த ஒரணாவை கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி பண்டிதர் கங்கையில் இறங்கினார் வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஒரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவர் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது ஏற்றுக்கொள் என்று சொல்லி வீசி எறிந்தார்.

நுங்கும் நுரையுமாக ப்ரவாஹமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்தே ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஒரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கையின் முகம் தோன்றியது; ‘பேசியது. பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள் ’ என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்தினக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலை கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான். அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்தான். கிழவனிடம் ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் மனைவியிடம் “கமலா, இதோ பார்த்தாயா, நான் எதற்குமே பிரயோஜனம் இல்லை, ஏட்டுச் சுரக்காய் என்பாயே ” இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு? “என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்? உங்களைப் போல் உதவாக்கரைகளுடன் பேசிவிட்டு தேங்காய் மூடி வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள் சீக்கிரம் கொடுங்கள் இன்றைய பொழுது துவையிலாலவது கழியட்டும் என்றாள் மனைவி” “அசடே, இதைப்பார் என் வேதத்தை மதித்து கவுரவித்து அதனால் பெற்றது.

உனக்காக நான் சம்பாதித்தது என்று கங்காதேவி தந்த வளையலை தந்தான் பண்டிதன். கமலாவுக்கு தன்னையோ, தன் கண்களையோ நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது கண் கூசியது. என்ன ஒருவளையல் தானா? இன்னொன்று? ” ‘அடுத்த முறை கங்கையை கேட்டு வாங்கி தருகிறேன் ’ என்று சமாளித்தான் பண்டிதன். இந்த ஒன்று எதற்கு உதவாதே. நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்களால் இதனால் உயிர் போனாலும் போகலாம் எனவே அவர் மனைவி கெட்டிக்காரி என்ன சொன்னாள்? ‘இதோ பாருங்கோ, இந்த ஒண்ண  வச்சுண்டு என்ன பிரயோஜனம் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளையலை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லோரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை இராஜாவிடம் கொடுத்து விட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக சவுகர்யமாக வாழலாம். இராஜாவிடம் சென்றான். கொடுத்தான் ராஜா வாங்கிப் பார்த்து மகிழ்ந்தார். ஒரு பை நிறைய பொற்காசுகளை கொடுத்தான். இரணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தான். மிக்க மகிழ்ச்சி அந்த இராணிக்கு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar