|
ஒரு பெண்ணுக்கு நதிகளின் மீது கொள்ளைப்பிரியம். வீட்டில் இருந்த மூன்று குடங்களில் நீர் ஊற்றி அவற்றுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி என பெயரிட்டாள். யார் தண்ணீர் கேட்டாலும், மூன்று குடத்தில் இருந்து, சிறிதளவு நீர் எடுத்து திரிவேணி தீர்த்தம் என கொடுப்பாள். “குடத்து நீரை திரிவேணி தீர்த்தம் என்கிறாளே! அப்படியானால், இவளது வீடு என்ன புனிதத்தலமா?” என்று ஊரார் கேலி செய்தனர். ஆனால் அவள் நம்பிக்கை இழக்கவில்லை. ஒருமுறை, அவளது கணவன் காசி சென்று, கங்கையில் நீராடிய போது, மோதிரம் காணாமல் போனது. வீட்டுக்கு வந்ததும், நடந்ததைச் சொல்லி வருந்தினான். அவனது மனைவி, வருந்தா தீர்கள். மனம் விரும்பி கொடுப்பதை மட்டுமே கங்கை ஏற்பாள். அவள் கொடுப்பாளே தவிர எதையும் எடுக்க மாட்டாள். நம் வீட்டில் கங்கா இருக்கிறாளே! அதில் பார்த்தால் தெரியுமே!” என கங்கா என்று பெயரிட்ட குடத்தில் கை விட்டு தேடினாள். என்ன ஆச்சரியம்! உள்ளே மோதிரம் வந்தது. கங்கையை வணங்கினால் இழந்தவை மீண்டும் கிடைக்கும். |
|
|
|