|
உருவ வழிபாட்டை கிண்டல் செய்து, ஒரு மன்னன் பேசிக் கொண்டிருந்தான். மக்களே! கடவுள் மீசை வைத்திருக்கிறானாம். சாமியாரைப் போல ஜடாமுடி தரித்திருக்கிறானாம். ஒருவன் தலையில் கங்கை நதியை தூக்கி வைத்துள்ளானாம். ஒருவன் கையில் சங்கையும், சக்கரத்தையும் வைத்து இருக்கிறானாம். அவனுக்கு 16 கை இருக்கிறதாம். இன்னொருவனுக்கு 12 கைகள் உள்ளதாம். ஒரே கடவுள் என்று வேறு பீற்றிக் கொள்கிறார்கள். ஒரு கடவுளுக்கு இத்தனை உருவங்கள் எப்படி இருக்க முடியும்? சிந்தித்து பார்க்க வேண்டாமா? என்றான்.
அந்தக் கூட்டத்தில் இருந்த விவேகானந்தர் எழுந்தார். ராஜாவே! உங்கள் தந்தை யார்?” என் தந்தை இறந்து விட்டார். ஏன் கேட்கிறாய்?” காரணத்துடன் தான். இறந்து போன உங்கள் தந்தை எங்கே?” அதெப்படி எனக்கு தெரியும்?” சரி...உங்கள் தந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்ன செய்வீர்கள்?” அவர் படத்தைப் பார்ப்பேன்,”. கண்ணுக்கு தெரியாத உமது தந்தையின் படத்தைப் பார்த்து எப்படி மகிழ்ச்சி அடைகிறீரோ, அப்படித்தான் இந்த மக்களும். கண்ணுக்கு தெரியாத ஒரே இறைவனை அவரவர் வசதிப்படி காளியாகவும், சிவனாகவும், கிருஷ்ணனாகவும், ராமனாகவும் பார்த்து மகிழ்கின்றனர். தங்கள் குறைகளைச் சொல்லி ஆறுதலடைகின்றனர். புரிகிறதா?” மன்னன் தலை குனிந்தான். |
|
|
|