|
சொர்க்கத்தில் நீண்ட காலம் இருந்த ஒருவனுக்கு வாழ்வு சலித்தது. அங்கிருந்து தப்பினான். நரகத்தில் இருந்து தப்பிய ஒருவனை வழியில் சந்தித்தான். இருவரும் நண்பர்களாயினர். “நண்பனே! நரகம் எப்படி இருந்தது?” என்றான் சொர்க்கவாசி. “சித்ரவதை தாங்க முடியலே! அங்கே ஏது சுகம்? அது கிடக்கட்டும்! உன் அனுபவம் பற்றி சொல்” என்றான் நரகவாசி. “எப்போதும் கொண்டாட்டம் என்றிருப்பதால் மனம் சலித்து விட்டது. அதனால் தப்பித்தேன்” என்றான். இருவருக்கும் ஒரு யோசனை தோன்றியது. யாருக்கும் தெரியாமல் இடம் மாற முடிவெடுத்தனர். அதன்படி சொர்க்கவாசி நரகத்திற்கும், நரகவாசி சொர்க்கத்திற்கும் சென்றனர். ஆரம்பத்தில் மாறுதல் மகிழ்ச்சி தந்தாலும், நாளடைவில் அங்கும் சலிப்பு ஏற்பட்டது. மீண்டும் தப்பித்த அவர்கள் சந்தித்தனர். ஒரேயடியாக இன்பம், துன்பம் என்றில்லாமல், இரண்டும் கலந்திருந்தால் தான் வாழ்வு ருசிக்கும் என்ற உண்மையை உணர்ந்தனர். |
|
|
|