|
ஒரு தொழிலைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் அதில் இறங்கக்கூடாது. ஒரு நரியும் முதலையும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும். அவை சேர்ந்து உருளைக்கிழங்கு பயிரிட்டன. செடி என்றால் மேலே தானே காய் காய்க்கும் என நினைத்த முதலை, மேல்பகுதி எனக்கும், கீழ்ப்பகுதி உனக்கும் என பாகம் பிரித்துக் கொண்டது. உருளைக்கிழங்கு பூமிக்கு கீழல்லவா விளையும்! நரியும் அப்பாவி போல,நீ சொல்வது போலவே செய்கிறேன் என்றது. செடி வளர்ந்ததும், அடியிலுள்ள கிழங்குளை நரி எடுத்துக் கொள்ள முதலைக்கு வெறும் இலை தான் கிடைத்தது. அடுத்தமுறை ஏமாறக்கூடாது என எண்ணிய முதலை, இம்முறை நெல் பயிரிடலாம். மேல் பகுதி உனக்கு,கீழ்ப்பகுதி எனக்கு என்று முட்டாள் தனமாக ஒப்பந்தம் போட்டது. பிறகென்ன! அறுவடையானதும் மேலிருந்த நெற்கதிரை நரி எடுத்துக் கொண்டது. முதலைக்கு ஏதும் கிடைக்கவில்லை.இந்த முதலை போலஏமாறாமல், எந்தத்தொழிலில் இறங்கினாலும், அதுபற்றிய அனுபவத்துடன் இறங்குங்கள். |
|
|
|