|
ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் படகில் சாது ஒருவரைக் கேலி செய்தனர். அளவுக்கு மீறியதால் சாதுஎச்சரிக்கும் நோக்கில் பார்த்தார். இதைக் கண்ட இளைஞன் ஒருவன் ஆக்ரோஷமாகி உழைக்கப் பயந்த சோம்பேறி மனுஷனான உனக்கு என்ன வீராப்பு இருக்கு! என்று சொல்லி அடிக்க வந்தான். சாதுவின் கண்கள் கலங்கின. அப்போது வானில் அசரீரி கேட்டது. என் அருமை சாதுவே! நீகட்டளையிட்டால் இந்த படகையே கவிழ்த்து விடுவேன்! என்றது.இதைக் கேட்டதும் இளைஞர்கள் வாயடைத்து போயினர். ஆனால், சாதுவோ, இளைஞர்களே! கவலைப்படாதீர்கள். அசரீரி சொன்னது போல, நான் எதுவும் நடக்க விடமாட்டேன் என்று சொல்லி ஆறுதல் அளித்தார்.
பிறகு கைகளை குவித்து, கடவுளே!எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நீயா இப்படி ÷ கட்பது? செய்வதாக இருந்தால் இவர்களின் புத்தியை நல்வழிப்படுத்து. படகைக் கவிழ்த்துவிடுவதால் யாருக்கும் பயன் இல்லை! என்று பிரார்த்தித்தார். அப்போது வானில் மீண்டும் அசரீரி ஒலித்தது.சாதுவே! மிக்க மகிழ்ச்சி. உன்னைச் சோதிக்கவே அப்படி சொன்னேன். உன் நல்ல உள்ளத்தை மற்றவர் புரிந்து கொள்ள ÷ வண்டும் அல்லவா? உனக்கு எப்போதும் என் அருள் உண்டு. இது போன்ற செயலில் ஈடுபடாத நல்ல புத்தியை இவர்களுக்கு அளித்தேன், என்றது.சாதுக்களுக்கு கடவுளின் கருணை எப்போதும் உண்டு என்பதை உணர்ந்த இளைஞர்கள் திருந்தி வாழத் துவங்கினர். |
|
|
|