|
இளைஞனான கரிகாற்சோழன் சோழநாட்டின் மன்னராகவும், நல்ல நிர்வாகியாகவும் திகழ்ந்தான். நீதி வழங்குவதில் அவனுக்கு நிகர் அவனே.ஒருசமயம், இரண்டுமுதியவர்கள் தங்கள்பிரச்னையைப் பேசித் தீர்க்க மன்னரின் உதவி நாடி வந்தனர். இளைஞனான கரிகாற்சோழனை கண்டதும் தங்கள் வழக்கினைத் தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.அனுபவசாலியால் மட்டுமே நல்ல தீர்ப்பு அளிக்க முடியும் என்பது அந்த அவர்களின் எண்ணமாக இருந்தது.அவர்களின் மனக் குறிப்பை அறிந்த கரிகாலன், பெரியவர்களே! நாளை அரசவைக்கு வாருங்கள்! அனுபவம் மிக்க முதியவர் ஒருவர் நடுவராக இருந்து உங்களுக்கு நீதி வழங்குவார், என்று சொல்லி அனுப்பி வைத்தான்.அடுத்த நாள் காலையில் அரசவையில் முதிர்ந்த ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். இவரே சரியான தீர்ப்பு அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் முதியவர்கள் பிரச்னையை எடுத்துக் கூறினர். தீர விசாரித்த கிழவர் இருவரும் ஏற்கும் விதத்தில் நல்ல தீர்ப்பு அளித்தார். அப்போது நடுவராக இருந்த கிழவர் தன் நரைமுடி, தாடி வேஷத்தைக் கலைத்து, தானே கரிகாற்சோழன் என்றஉண்மையைக் கூறினார்.தங்களின் மனம் நோகக் கூடாது என்பதற்காக, கிழவராக வந்து தீர்ப்பு அளித்ததை அறிந்து முதியவர்கள்ஆச்சரியப்பட்டனர். திறமை சாலிகளுக்கு வயது ஒரு தடையே இல்லை.
|
|
|
|