|
சத்தியம், தர்மம் போன்ற உயர்பண்புகளைஉபதேசிக்கும் ராமாயணம், மகாபாரதத்தை எழுதிய வால்மீகி, வியாசர் ஆகிய இருவருக்கும் குரு யார் தெரியுமா? நாரதர் தான். வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன் என்பவருக்கு, நாரதர் ராம நாமத்தைஉபதேசித்தார். அதைக் கூட சொல்லத்தெரியாதரத்னாகரன், ‘மரா’ என சொல்ல ஆரம்பித்தார். அதை வேகமாகச் சொல்லும் போது ‘ராம’ என்று சரியாக மாறியது. அந்த நாமத்தின் பலனால், அவர் ராமாயணத்தையே எழுதுமளவு வல்லமை பெற்றார். வால்மீகி என்னும் பெயர் பெற்றார். வேதம், புராணம், பிரம்மசூத்திரம் என அத்தனையையும் எழுதிய பின்னும்அமைதியின்றி தவித்தவியாசருக்கு, பக்தியுணர்வை போதித்து பாகவதத்தை எழுதவும் துõண்டினார். விஷ்ணுவே மூலமுதற்பொருள் என தவத்தில் ஆழ்ந்த துருவன் என்றசிறுவனுக்கும் குருவாக விளங்கினார். வலிய வந்து கலகம் செய்யும் இவரால் கலகம் உண்டானாலும், அதன் முடிவு நன்மையாகவே அமையும். |
|
|
|