Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல்ல வார்த்தை நாலஞ்
 
பக்தி கதைகள்
நல்ல வார்த்தை நாலஞ்

“உம்...நல்லதை யார் சாமி இப்ப பேசுறாங்க!எல்லாம் காசு, பணம், துட்டு, மணி... இதைஅடைவதற்கு என்னென்ன தகிடுதத்தங்கள்எல்லாம் உண்டோ...அதைப்பத்தி மட்டும் தான்‘டிஸ்கஸ்’ பண்றாங்க! ‘டிவி’ நாடகத்திலே, மாமியார்மருமகளை அடிக்கிறது, மருமகள் மாமியாரைஉதைக்கிறது... இதைத்தான் காட்டுறாங்க!நல்லதைப் பேசுவது என்பது குறைந்து விட்ட காலம் இது. ஏதோ...கொஞ்சநேரம்...உங்களோடநாலு நல்ல வார்த்தை பேசலாம்னு இங்கோவந்திருக்கோம்! யோகமுள்ளவர்கள் படிச்சுகிடுங்க!சமஸ்கிருதத்திலே ‘ஸுபாஷிதம்’ன்னாஎன்ன தெரியுமா? அதைத் தெரிஞ்சுகிடறதுக்குமுன்னாடி ஒரு சமஸ்கிருத ஸ்லோகம்ஒன்றைக் கேளுங்கோ!“அஷ்டா தச புராணானாம் வியாசேன கீர்திதம்!பரோபகார: புண்யாய பாபாய பரிபீடனம்” இதற்கு என் குருவிடம் பொருள் கேட்டேன். அவர் சொன்னது: “வியாச முனிவர் பதினெட்டு புராணங்களிலும் இரண்டே இரண்டு தார்மீகசிந்தனைகள் அல்லது கட்டளைகளை வலியுறுத்தி இருக்கிறார்.. மக்களுக்கு சேவை செய்தால்நமக்கு புண்ணியம் கிடைக்கிறது; தொல்லை கொடுத்தால் நமக்கு பாவம் சேருகிறது.....“ஆஹா..உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் பொருந்தும் விஷயம் இது அல்லவோ....”என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, குரு தொடர்ந்தார்.

“இந்த மாதிரி ஸ்லோகங்களைத் தான்‘ஸுபாஷிதங்கள்’ என்று சொல்வார்கள். ‘ஸு’என்றால் ‘நல்லது’ ‘பாஷிதா’ என்றால் “பேசப்படுவை. இரண்டையும் சேர்த்து ‘நன்குபேசப்படுவை’ அல்லது‘நல்மொழிகள்’ என்றுசொல்லலாம். இவைமிகவும் உள்ளார்ந்த  நீதிநெறி அறிவுரைகளையும், புத்திமதிகளையும் நமக்கு அளிக்கின்றன....மேலும் நமக்கு சரியான  செயல்களைசெய்ய வழிகாட்டுகின்றன.  உதாரணத்திற்கு  ஒரு  ஸுபாஷிதம் பார்க்கலாம்,” என்றவர்மேலும் தொடர்ந்தார்.“பிரிய வாக்ய பிரதானேன சர்வே துஷ்யந்தி மானவா:!  தஸ்மாத் ப்ரியம் ஹி வக்தவ்யம் வசனே கா தரித்ரதா!!” இதன் பொருளைக் கேளுங்கள். ‘பிரியமான வார்த்தைகள் பேசுவதால் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள். எனவே, ஆசையுடனும்அன்புடனும் பேசும் வார்த்தைகளுக்குஏன் குறைவு இருக்கவேண்டும்?’நம்முடைய கோபத்தை குறைக்க இந்த ஒரு ஸ்லோகத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதுமே....! கோபமெல்லாம் பஞ்சாக பறந்து போய் விடாதா என்று தோன்றியது.இந்த மாதிரி எல்லா விஷயத்தைப் பற்றியும் வேண்டிய அளவுக்கு நம் கையிலேஸுபாஷிதங்கள் இருக்கின்றன. ஸுபாஷிதங்களை பற்றி சிந்திப்பதாலும், உபயோகப்படுத்துவதாலும், நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மை கிடைக்கும். இறக்கை இல்லாமலே நாம் பறக்க ஆரம்பிக்கலாம். நம்முடைய நீதி வாழ்க்கை தொடர்ந்து நீடிக்கமற்றும் நாம் நல்ல உயர்ந்த குணமுடையமனிதர்களாக மாறுவதற்கும்ஸுபாஷிதங்கள் வழிகாட்டும் என்பதில் எந்த சந்தேகமும்இருக்க முடியாது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar