|
ராமபிரான் 11000 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார். அன்றைய தினம் அவருக்கு கடைசிநாள். ஸ்ரீமன் நாராயணனே, ராமனாக பூமியில் அவதாரம் செய்திருக்கிறார். எமனுக்கு தன் கடமையைச் செய்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டு விட்டது. நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். நம்மிடம் அவன் அனுமதி கேட்பதில்லை. நினைத்த நேரத்தில் பஸ்சிலோ, ரயிலிலோ, வெள்ளத்திலோ, நெருப்பிலோ, முதுமையாகவோ வந்து நம்மை அள்ளிக்கொண்டு போய் விடுவான். அயோத்தியி லோ பகவான் அல்லவா மனிதனாகப் பிறந்திருக்கிறார். அதனால், தன் சுயரூபத்தில் வராமல் ஒரு முனிவரின் வடிவில் வந்தான். காவலன் மூலம் தகவல் சொல்லி யனுப்பி, ராமன் அருகில் சென்றான். ராமா! என்னைத் தெரிகிறதல்லவா! நான் எமதர்மன் வந்திருக்கிறேன். இன்றோடு பொழுது முடிந்தது. நீங்கள் கிளம்ப ÷ வண்டும், என்றான். இதனால் தான் எமனை சத்யசந்தன் என்பார்கள். அவனுக்கு அயோத்தி ராமனும் ஒன்று தான்! கடைக்கோடி ராக்கப்பனும் ஒன்று தான். குறித்த தேதியில் வந்து விடுவான். நேரம் தவறாமைக்கு எமனை உதாரணமாகக் கொள்ள வேண்டும். ராமனும் அப்படியே! அவன் நாராயணனாகிய தெய்வம். எமனே! இன்னும் நாலைந்து நாள் பொறுத்திரு! அயோத்தியில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லவில்லை. இத்தனை நாள் தான் இங்கு இருக்க வேண்டும் என்று வாக்கு தவறாமல் கிளம்பி விட்டார். வால்மீகி இந்தக் காட்சியை அற்புதமாக ராமாயணத்தில் வர்ணித்து இருக்கிறார். |
|
|
|