|
இரண்யன் தனக்கு மனிதராலோ, மிருகத்தாலோ, தேவர், முனிவர், பறவை, ஆயுதம் என உலகில் என்னென்ன பொருள் உண்டோ, அத்தனையாலும் அழிவு வரக் கூடாது என பிரம்மாவிடம் வரம் வாங்கிவிட்டான். அந்த தைரியத்தில் தன்னையே கடவுளாக நினைக்க வேண்டும் என உத்தரவிட்டான். ஆனால், அவன் பெற்ற பிள்ளையே அதை ஏற்க மறுத்தது. தாயின் கர்ப்பத்தில் இருந்த காலத்தில், நாரதர் அவனது தாய்க்கு ஸ்ரீமன் நாராயணனின் பெருமையை எடுத்துச் சொன்ன போது, குழந்தையும் கேட்டது. அதன் விளைவாக நாராயண பக்தனானான் பிரகலாதன். அந்த அரிய பக்தன் பட்ட கஷ்டத்தில் இருந்து காப்பாற்றக்கூட பகவான் வரவில்லை. ஆனால், என் நாராயணன் இந்த துõணில் இருக்கிறான் என்று சொன்ன சொல்லைக் காப்பாற்ற வந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் எந்த ரூபத்தில் வந்து வேண்டுமானாலும் இரண்யனை அழித்திருக்க முடியும். ஆனால், பிரம்மா இரண்யனுக்கு வாக்கு கொடுத்து விட்டதால், இரண்யன் கேட்காத மனித, மிருக (நரன்(மனிதன்)+சிங்கம்) இணைப்பாக வந்து, பிரம்மாவின் சொல்லையும் காப்பாற்றினான். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நம் புராணங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம். |
|
|
|