|
இளவரசன் ஒருவன் வேட்டைக்கு வந்த இடத்தில், ஒரு வேடனின் குடிசைக்கு சென்றான். அங்கு இரண்டு குட்டி யானைகளை சங்கிலியிலும், பெரிய யானைகளை கயிற்றிலும் கட்டியிருக்க கண்டான். “பெரிய யானையை கயிற்றில் கட்டியிருக்கிறாயே? அறுத்து கொண்டு ஓடி விடாதா....” என்றான் இளவரசன். வேடன் அவனிடம், “இளவரசே... கயிற்றில் கட்டியிருக்கும் இவை, குட்டியாக இருந்த போது சங்கிலியால் தான் பிணைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு தேவையான உணவை நானே கொடுக்கிறேன். என்னிடம் பழகியும் விட்டதால், வேறிடம் போய் என்ன ஆகப் போகிறது என்று நம்பிக்கை இழந்து விட்டன. இனி ஓட முயற்சிக்காது,” என்றான். இந்த யானைகள் போல, மனிதன் நம்பிக்கை இழக்க கூடாது. விடாமுயற்சி இருந்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும்.
|
|
|
|