|
ஆற்றுக்கு மண் பானையுடன் சென்றாள் ஒரு ஏழைப்பெண். அங்கு கல் ஒன்றில் இடறியதால், பானை கீழே விழுந்து உடைந்தது. அதைக் கண்ட பணக்காரப்பெண் ஒருத்தி தன்னிடம் இருந்த இரு தாமிரப் பானைகளில் ஒன்றை இரவல் அளித்தாள். மறுநாள் ஏழைப்பெண் பானையுடன் ஒரு தட்டையும் சேர்த்துக் கொடுத்தாள். “அக்கா! நேற்று உங்க வீட்டுத் பானை எங்க வீட்டில் குட்டி ஒன்று போட்டது. அது தான் இந்த தட்டு” என்று பொய் சொன்னாள். பணக்காரி மகிழ்ச்சியுடன் வாங்கினாள். சில நாள் கழித்து ஒருநாள் ஏழைப்பெண், “அக்கா.... இந்தப் பக்கம் ஒரு வேலையாக வந்தேன். அந்த பானையை கொடுத்தால் கையோடு ஆற்றுக்குச் செல்வேன்” என்றாள். யோசிக்காமல் அவளும் கொடுத்தனுப்ப, ஒரு வாரம் கடந்தும் பானை திரும்பவே இல்லை. நேரில் போன பணக்காரி,“அடியே..... என் பானை என்னாச்சு?” என்று கேட்டாள். “அதுவா... இறந்து போச்சு.... நான் என்ன செய்ய முடியும்?” என்றாள். “தவலை எப்படி இறக்கும்?” என்று கொதித்தாள். ஏழைப்பெண்ணோ, “அப்போ குட்டி போட்ட பானை இப்போ ஏன் இறக்காது?” என்று பதிலளித்தாள். ‘இலவசமாக கிடைத்த தட்டு, பானையை விழுங்கி விட்டதே..’ என்ற வருத்தத்துடன் பணக்காரி வீடு திரும்பினாள்.
|
|
|
|