|
விதேக நாட்டு மன்னன் பகுலாச்வன், அந்தணர் சுருததேவன் ஆகியோர் கிருஷ்ண பக்தர்களாக இருந்தனர். அவர்களை ஆசிர்வதிக்க கிருஷ்ணர் விரும்பினார். கிருஷ்ணரின் வருகையை அறிந்ததும் விதேக நாடே விழாக்கோலம் பூண்டது. மக்கள் ஒன்று கூடிவரவேற்றனர். கிருஷ்ணரை நேரில் கண்ட மன்னரும், அந்தணரும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். இருவரும் கிருஷ்ணரை அவரவர் இல்லத்திற்கு விருந்தினராக அழைத்துச் செல்ல விரும்பினர். இருவரின் அன்பும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்பதை உணர்ந்த கிருஷ்ணர் மாயாசக்தியால் இருவராக மாறினார். ஒரு கிருஷ்ணர் மன்னரின் அரண்மனைக்கும், மற்றொரு கிருஷ்ணர் அந்தணரின் குடிசைக்குமாகப் புறப்பட்டனர். அரண்மனையில் உயர்ந்த ஆசனம், வாசனை திரவியம், அறுசுவை அன்னம் எனபலமான வரவேற்பு அளிக்கப் பட்டது. அந்தணரின் குடிசையில், தர்ப்பை புல்லில் அமர்ந்த கிருஷ்ணர் பால், பழம் சாப்பிட்டார். இருவரின் உபசரிப்பையும் கிருஷ்ணர் ஒன்று போலவே ஏற்றார். ஆனால், இந்த உண்மையை அறியாத அவர்கள் தங்கள் வீட்டுக்கு மட்டுமே கிருஷ்ணர் வந்ததாக எண்ணினர். பிரபோ! என் அன்பிற்கு இணங்கி விருந்தினராக வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள் என்று சொல்லி மகிழ்ந்தனர். கிருஷ்ண ஜெயந்தியன்று சீடை, முறுக்கெல்லாம் செய்தும் கண்ணனை வணங்கலாம். எளிமையாய் ஒரே ஒரு பூவை துõவியும் வழிபடலாம். எல்லாமே கடவுளுக்கு ஒன்று தான். துõய பக்திக்கே கடவுள் மதிப்பளிக்கிறான்.
|
|
|
|