|
பாத்திரம் செய்து விற்பதைத் தொழிலாகக் கொண்டவர் யாகூப் பின் லைஸ் என்ற இளைஞர். அவர் ஆட்சியாளர்கள் சுகபோகத்தில் திளைத்து, மக்களைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டு உள்ளம் குமுறினார். எப்படியாவது அரச பதவியைக் கைப்பற்ற எண்ணினார். அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். ‘பாத்திரக்காரன் எப்படி மன்னராக முடியும்? என்று அவரது முயற்சியை ஒரு முதியவர் கேலி செய்தார். யாகூப் அதைப் பொருட்படுத்தாமல், ஒரு வீரரிடம் வாள் பயிற்சி பெற்றார். அச்சமயத்தில், முஸ்லிம்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியவர்களை ஒடுக்க உருவாக்கப்பட்ட படையில் சேர்ந்தார். அந்த படையின் தலைவரான சாலிஹ் பின் நாஸர் இவரது வீரத்தைப் பாராட்டி படைத்தளபதி யாக்கினார். இந்நிலையில், சாலிஹ் பின் நாஸர் இவ்வுலகை நீத்தார். யாகூப் தலைமையில் படைகள் போராடின. பாரசீக மன்னர் முஹம்மத் பின் தாஹிர் என்பவர் மக்களைப் பற்றி சிந்திக்காமல் குடியில் மூழ்கினார். அரண்மனைக்குள் படையுடன் நுழைந்த யாகூப், ஆட்சியைக் கைப்பற்றினார். இறையச்சம் கொண்டு, இறையருளை நம்பி முயற்சி செய்தால் முடியாதது ஏதுமில்லை என்பதற்கு இவரது வாழ்க்கை தாரணம். |
|
|
|