|
ஒரு இளைஞன் பிறந்தது முதல் காட்டிலேயே இருந்ததால், அவன் பெண்களை பார்த்ததே இல்லை. ஒருமுறை அவன் நாட்டுக்குள் பிச்சை எடுக்க சென்றான். ஒரு வீட்டில் பிச்சை கேட்க ஒரு இளம்பெண்ணை கண்டான். ஆணுக்குரியதைப் போல அங்கங்கள் அவளுக்கு இருந்தாலும், மார்புகள் மட்டும் வித்தியாசமாக இருந்தது, அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தன் சந்தேகத்தை அங்கிருந்த சிலரிடம் கேட்டான். வயதுக்கு வந்த பெண்களுக்கு அவ்வாறு இருக்கும். அவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தால், தானாக எடுத்துச் சாப்பிடும் பருவம் வரை, பால் சுரந்து குழந்தையின் பசி போக்கும். அதற்காகதான் பெண்களுக்கு அவை படைக்கப்பட்டன,” என்றனர். இதைக் கேட்டதும், பிச்சை பாத்திரத்தை வீசி விட்டு பிறக்கப்போகும் குழந்தைக்காக, மார்புகளைக் கொடுத்துள்ளார். அப்படியிருக்க, வலுவாக இருக்கும் தனக்கும் உணவை இறைவன் தருவார்,” என எண்ணி புறப்பட்டான். மனிதனுக்கு உழைப்பு முக்கியம். பிறந்ததிலிருந்து வாலிபப்பருவம் வரையே தாயிடம் உணவை எதிர்பார்க்க வேண்டும். அதன்பின் உழைத்து சாப்பிட வேண்டும். இக்கதை காஞ்சிபெரியவரால் அடிக்கடி சொல்வதுண்டு. |
|
|
|