Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல்லதை செய்து நல்லதை பெறுவோம்!
 
பக்தி கதைகள்
நல்லதை செய்து நல்லதை பெறுவோம்!

எத்தனை தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தான் எனும் அகங்காரம், கோபம் இருந்தால், அவர்கள் கீழ் நிலையை அடைவர் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்:
அவந்தி நாட்டை, சுலபன் எனும் அரசர் ஆண்டு வந்தார். அவர் மனைவி சுலபை; மன்னர் கல்வியறிவில் சிறந்தவர் என்றாலும், பதவியும், அதன் மூலம் கிடைத்த போகங்களும் அவர் மனதை மயக்கின. மனிதனாக பிறந்ததே, இந்த போகங்களை அனுபவிப்பதற்காகத் தான்; இதை விட்டு, பாவமாவது, புண்ணியமாவது... என்று மனம் போன போக்கில் வாழ்ந்தார். அத்துடன், தெய்வ நம்பிக்கை கொண்டவர்களை இகழ்ந்து, அவமானப்படுத்தவும் செய்தார். ஆனால், அவர் மனைவி சுலபையோ, கணவனே கண் கண்ட தெய்வம் என, வாழ்ந்ததோடு, அனைவரிடமும் மிகுந்த அன்பு காட்டினாள்.

ஒருநாள், அரசவைக்கு, மதுசூதனன் எனும் முனிவர் வந்தார். அவருடைய தவக்கோலத்தையும், துறவு ஒழுக்கத்தையும் கண்ட சுலபன், அவரை இழிவுபடுத்தி பேசினார். மன்னா... ஒன்றை பிடிக்கவில்லையென்றால், ஒதுங்கியிருக்க வேண்டுமே தவிர, அறியாமல் அதை இகழக்கூடாது. இந்த பொது நாகரிகம் கூட தெரியாத நீ, எருதாக மாறக் கடவாய்... என, சாபம் கொடுத்தார், முனிவர். உடனே எருதாக மாறினார், சுலபன். தன் கணவருக்கு நேர்ந்த துயரத்தை கண்டு மனம் வெதும்பிய சுலபை, முனிவரே... நீங்கள் தவசீலராய் இருந்தும், அரசர்களின் குணங்களை புரிந்து கொள்ளாமல், பொறுமை இழந்து சாபம் கொடுத்ததால், நீங்கள் கழுதையாகக் கடவது... என, சாபம் கொடுத்தாள். கற்புக்கரசியான அவள் சாபம் பலிக்கவே, கழுதையாக மாறத் துவங்கிய முனிவர், தவறு செய்த கணவனை கண்டிக்காமல், என்னை கழுதையாக சபித்த நீ, புல் சுமந்து விற்கும் பெண்ணாக கடவது... என்று, பதில் சாபம் கொடுத்தார். அதனால், புல் சுமந்து விற்கும் பெண்ணாக மாறினாள், சுலபை. பல ஆண்டுகளுக்கு பின், இவர்கள் மூவரும் சந்தித்தனர். புல் விற்கும் பெண் வைத்திருந்த அருகம்புல்லை, தன் வாயால் பற்றி இழுத்தது, எருது. அதன் வாயில் இருந்த அருகம்புல்லை பிடுங்கியது, கழுதை. மூவருக்கும் சிறு களேபரம் மூள, அங்கிருந்தோர் மூவரையும் விரட்டினர். அப்போது, கழுதை வாயில் இருந்த புல், வழியில் இருந்த விநாயகர் மீது விழுந்தது. அந்த அருகம்புல்லை, மூவரும் அர்ச்சித்ததாக ஏற்றுக்கொண்ட விநாயகர், மூவருக்கும் முக்தியை வழங்கினார். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் நாம் செய்யும் நற்செயல்களை வழிபாடாக ஏற்று, அருள் புரியும், தெய்வம். அதனால், நல்லதை செய்வோம்... விநாயகர் அருளை பெறுவோம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar