|
நட்பின் இலக்கணம் குறித்து விளக்க ஆரம்பித்தார் குரு, “சீடர்களே... உங்கள் இளமைக்கால நட்பு முக்கியமானது. ஏனென்றால் அப்போது உங்களுக்கு கிடைக்கும் நண்பர்களை பொறுத்தே எதிர்கால வாழ்வு அமையும்.” என்றார். இதை கேட்டதும் ஒரு சீடனுக்கு சந்தேகம் வந்தது, “குருவே, நல்லவர்களுடன் சேரும் போது தீயவனும் நல்லவனாகிறான். ஆனால் தீயவர்களுடன் சேரும் போது மட்டும், நல்லவனும் கெடுகிறானே... ஏன்?” என்றான். குரு சிரித்தபடியே,“ஒரு அண்டா நிறைய தண்ணீர் இருக்கிறது என்று வைத்து கொள். அதில் ஒரு குவளை பால் ஊற்றினால் என்னாகும்?” சீடன் யோசித்தபடி,“தண்ணீரோடு பால் கலந்து தன் நிலையை இழந்து விடும்” “சரி... அதே சமயத்தில் ஒரு அண்டா பாலில் ஒரு குவளை தண்ணீரை சேர்த்தால்....?”
“அது பாலின் தன்மையை பெற்று விடும்” “மிகச்சரி. அதுபோலவே நட்பும். தீயவர்களிடம் பழகும் நல்லவன் கெட்டுப் போவான். ஆனால் நல்லவர்களிடம் பழகும் தீயவன் நல்லவன் ஆவான். எனவே நட்பு கொள்ளும் முன், அவர்களின் குணம் பற்றி தெரிந்து பழக வேண்டும்” என்றார் குருநாதர்.
|
|
|
|