|
ஒருவன் திருக்கோவிலூர் எனும் ஊருக்குச் செல்வதற்காகக் கிளம்பினான். அப்போது வழியில் தென்பட்ட ஒருவரிடம் அந்த ஊருக்குச் செல்ல வழி கேட்டான். அவரும் அவனுக்கு ஒரு வழியைக் காட்டினார். சிறிது தூரம் சென்றதும் வேறொருவரிடம் வழி கேட்டான். அவர் வேறோர் வழியைச் சொன்னார். இன்னும் சிறிது தொலைவு கடந்ததும் வேறு ஒருவரைக் கண்டு, அவரிடமும் வழி கேட்டான். அவர் கூறிய வழியில் பயணிக்கத் தொடங்கினான். ஆனால், அவனால் திருக்கோவிலூரை அடைய இயவில்லை. இது போன்றதுதான் ஞானத்தை அறிவதும். ஞானத்தினை அடைய விரும்புவோர், ஒரே குருவிடம் சரணடைந்து, அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவர் சொல்லும் பாதையில் செல்ல வேண்டும். அப்படிச் செய்வதுதான் ஞானத்தை எளிதில் அடைய இயலும் வழியாகும். |
|
|
|