|
நிரஞ்சனா பர்னாதன் என்பவன் சிறந்த சிவபக்தன். சிவனாரைக் குறித்து அவள் செய்யும் தவம் நெடுநாள்களுக்கு நீடிப்பது உண்டு. ஒருமுறை சிவனாரைக் குறித்துக் கடும் தவத்திலிருந்தவனுக்கு, விதி வசத்தால் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்தது. ஆகவே, தவம் கலைந்து கண்ணைத் திறந்தான். அப்போது அவனைச் சுற்றிலும் சிங்கங்களும், புலிகளும், பறவைகளுமாகப் பல உயிரினங்கள் காவலுக்கு இருந்ததைக் கண்டான். பசி வாட்டத்துடன் திகழ்ந்தவன்முன், பழங்களைப் பறித்துவந்து போட்டன பறவைகள். ‘இது ஈசனின் கருணையே ’ என்று மகிழ்ந்த சிவபக்தன், கனிகளைச் சாப்பிட்டுவிட்டுத் தவத்தைத் தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கழிந்தன. ஒருவாறு அந்தத் தவத்தை முடித்துக்கொண்டு சிவவழிபாட்டைத் தொடங்கினான். ஒருநாள் தர்பைப்புல்லை அறுக்கும்போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது. ஆனால், அவனுக்கோ எந்தப் பதற்றமும் இல்லை. ஆனால், குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதுபோல அந்த ஈசன் பதறிப்போனார். |
|
|
|