Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடமையை செய்வோம்!
 
பக்தி கதைகள்
கடமையை செய்வோம்!

வேடுவர் குலத்தில் பிறந்த சபரி, சிறுவயது முதல், ஸ்ரீராம மந்திரத்தை ஜெபித்து வந்தாள். இவள், மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்த வேளையில், அங்கு வந்த ஸ்ரீராமரை, அன்போடு வரவேற்று, உபசரித்து, ஆசிரமத்தை அவருக்கு சுற்றிக் காட்டினாள். ஆசிரமத்திற்கு வெளியே வயல் வெளியில், வாடாத நறுமணம் மிக்க மலர்கள் ஏராளமாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் மணத்திலும், அழகிலும் மனதை பறிகொடுத்த ஸ்ரீராமர், ’அம்மா... இந்த மலர்கள் எல்லாம் மிகுந்த அழகோடு இருக்கின்றன; இதன் நறுமணம் காற்றிலே கலந்து பரவி, மனதுக்கு இதமளிக்கிறது. இப்படிப்பட்ட மலர்கள், இங்கு எப்படி தோன்றின...’ எனக் கேட்டார். ’ஸ்ரீராம பிரபு... அது, ஒரு மழைக்காலம்... ஆசிரமத்தில் விறகு இல்லை; சீடர்களும் அதிதி(விருந்தினர்)களும் ஏராளமாக இருந்தனர். ஆனாலும், விறகு வெட்டி வர, யாரும் முன் வரவில்லை. அதனால், தன் முதுமை பருவத்தையும் பொருட்படுத்தாமல், விறகு வெட்ட புறப்பட்டார், மதங்க முனிவர். ’அதைப் பார்த்தவுடன், சீடர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் ஆளுக்கொரு கோடாலியை துாக்கியபடி, மதங்க முனிவரின் பின் சென்றனர். அந்தி சாயும் வரை, அனைவரும் விறகு வெட்டினர்; பின், அனைத்தையும் கட்டி எடுத்து, ஆசிரமம் திரும்பினர்.

’மறுநாள் பொழுது புலர்ந்தது; அனைவரும் விழித்து எழுந்தனர். காற்றில் பரவி வந்த நறுமணத்தால், ஆச்சரியமடைந்து வெளியே வந்தனர். அங்கே, ஆசிரமத்தை சுற்றி, எங்கு பார்த்தாலும் நறுமணம் வீசியது. காரணம், அருகிலுள்ள வயல் பகுதியில், விசித்திரமான மலர்கள் மலர்ந்து, நறுமணம் வீசியது. ’திடீரென்று அம்மலர்கள் எப்படி வந்தன என, மதங்க முனிவரிடம் கேட்ட போது, ’முந்தைய நாள் மாலையில் விறகு வெட்டியவர்களின் வியர்வை துளிகள் எங்கெங்கு விழுந்தனவோ, அங்கங்கே அந்த அழகான மலர்கள் மலர்ந்திருக்கின்றன...’ என்று கூறியதும், ’ஆகா... உடல் உழைப்பின் பெருமையே பெருமை...’ என்று வியந்தார், ஸ்ரீராமர். இது, மூல நுாலில் காணப்படாத கர்ண பரம்பரைக் கதையாக இருந்தாலும், உடல் உழைப்பின் மகிமையை சொல்வதோடு, தம் கீழ் உள்ளவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அவ்வேலையை தாங்களே செய்து, அதன் மூலம், அடுத்தவருக்கு வழி காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar