|
சுவாமி விவேகானந்தர் ஒரு முறை சீனாவுக்கு பயணம் சென்றார். அங்குள்ள சில கோயில்களில் பிற மதத்தினரை அனுமதிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் விவேகானந்தருக்கு அங்கு சென்று பார்க்கும் விருப்பம் உண்டானது. காவலர்களின் தடையை மீறி விவேகானந்தர், மொழிபெயர்ப்பாளருடன் கோயிலுக்குள் நுழைய முயன்றார். காவலர்கள் இருவரையும் விரட்ட முயன்றனர். மொழிபெயர்ப்பாளர் பயத்தில் அலறியபடி ஓட ஆரம்பித்தார். அவரைத் தடுத்த விவேகானந்தர்,“ஐயா... துறவியை சீனமொழியில் எப்படி அழைப்பர் என்று சொல்லுங்கள்”என்று கேட்டார். மொழிபெயர்ப்பாளரும் சொல்லியபடி விரைந்தார். விவேகானந்தர் காவலர்களை நோக்கி சீனமொழியில்,“நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் துறவி”என்று உரத்த குரலில் கத்தினார். அதைக் கேட்ட காவலர்கள் தவறை உணர்ந்து தடியை கீழே போட்டனர். விவேகானந்தரை ராஜ மரியாதையுடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அவரும் கோயிலைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். கடைசியில் காவலர்கள் சைகை மூலம் விவேகானந்தரிடம் மந்திரத் தாயத்து தருமாறு வேண்டினர். தன் பையில் இருந்து காகிதத்தை எடுத்து அதில் ‘ஓம்’ என்று எழுதி அனைவரிடமும் கொடுத்தார். மனதிலே துணிவு இருந்தால் மொழி தெரியாத இடத்தில் கூட சவாலை எதிர்கொள்ள முடியும்.
|
|
|
|