|
ஞானி ஒருவரின் சீடன், இறைவனைக் காண முயற்சிப்பதாகக் கூறி, கோயில்கோயிலாக அலைந்தான். உண்மையான தேடல் அது அல்ல. என்று சொல்லியும் கேட்காத அவனைத் திருத்த நினைத்தார் ஞானி. ஒரு நாள் இரவு வீட்டு வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி. அவரது செயலுக்குக் காரணம் புரியாத சீடன் அவரிடம் அதுபற்றிக் கேட்டான். நீரில் எவ்வளவு அழகாக நிலவு ஜொலிக்கிறது. அதைத்தான் ரசிக்கிறேன்..! என்றார் ஞானி. அவரது பதில் சீடனை வியப்பில் ஆழ்த்தியது. என்னது பிம்பத்தை ரசிக்கிறீர்களா... அதற்கு பதில் கொஞ்சம் தலையை உயர்த்தினால் நிஜமான நிலவின் எழிலையே ரசிக்கலாமே..! என்றான் சீடன். புன்னகைத்த ஞானி சொன்னார்.. உலகின் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் கடவுளை நீ கோயிலில் மட்டும் தேடும்போது, நான் மட்டும் நிலவை நீரில் பார்க்கக் கூடாதா? ஞானி சொன்னதும், சீடனின் அஞ்ஞானம் அகன்றது. |
|
|
|