Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கோடீஸ்வர யோகம்
 
பக்தி கதைகள்
கோடீஸ்வர யோகம்

காளிமுத்து என்றொரு விவசாயி இருந்தார். காளி பக்தரான அவர் மந்திரம் ஜெபித்து திருநீறு கொடுப்பது வழக்கம். தன்னிடம் வந்தவருக்கு உதவி செய்ய மறுத்ததில்லை. அந்த ஊரில் கோடீஸ்வரன் என்றொரு கருமி இருந்தான். அவனுடைய குழந்தை இரவில் தூங்காமல் அழுதது. பக்தரைப் பற்றிக் கேள்விப்பட்டான் அவன்.  குழந்தைக்காக பக்தரிடம் திருநீறு பெற்றான். காணிக்கை கொடுக்க விரும்பிய கோடீஸ்வரனிடம் பக்தர், ‘விரும்பியதை கொடுத்தால் போதும்’ என்றார். அவன் சில்லரைக் காசை கொடுத்து விட்டு கிளம்பினான். அன்றிரவு குழந்தை நன்றாக உறங்கியது. கோடீஸ்வரன் மனதிற்குள், “இந்த ஆளை விவசாயியின்னு சொன்னாங்களே! குழந்தை நிம்மதியா தூங்குறதைப் பாத்தா மந்திரவாதியா இருப்பாரோ....”என எண்ணினான். மறுநாள் இரவு பக்தரின் வீட்டுக்குச் சென்றான். வயலுக்குச் சென்ற களைப்பில் அவர் அமர்ந்திருந்தார். அருகில் சென்று, “சாமி... ரொம்ப நாளா ஒரு ஆசை. பெயருக்கேத்த மாதிரி கோடீஸ்வரனா வாழ ஆசைப்படறேன். நீங்க தான் வழி காட்டணும்”என்றான். பக்தரும், “அதுக்கென்ன.... ஆக்கிட்டா போச்சு”என்றார்.  கோடீஸ்வரன், “இப்பவே பணம் தரப் போறீங்களா.....”என்று சிரித்தான். “தந்திட்டா போச்சு. நிதமும் பத்தாயிரம் ரூபா வாங்கிக்கோ. ஆனா, ஒரு நிபந்தனை”என்று இழுத்தார் பக்தர்.

“நிபந்தனையா.....”என தயங்கினான்.  “காளியாத்தாளுக்கு காணிக்கை தரணுமே..... முதல் நாளான இன்று ஒரு ரூபா கொடுக்கணும். அது அப்படியே இரட்டிப்பா நிதமும் அதிகமாயிட்டே இருக்கும்” என்றார் பக்தர். கோடீஸ்வரன், “ம்ம்... சரிங்க சாமி... காளி மீது சத்தியமா காணிக்கையைத் தர்றேன்” என்றான் வேகமாக. பக்தர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, காணிக்கையாக ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டார்.  வீட்டிற்குப் போன கோடீஸ்வரனுக்கு சந்தேகம் எழுந்தது. பணம் எல்லாம் கள்ள நோட்டாக இருக்குமோ என்று எடுத்துப் பார்த்தான். சரியாக இருந்தது.  ‘ஒரு ரூபாய்க்கு பதிலா பத்தாயிரம் கொடுக்கிற இந்த ஆளு மடையனாத் தான் இருக்கணும்’ என்று சொல்லி சிரித்தான். இரண்டாம் நாளும் பத்தாயிரத்தை பெற்றுக் கொண்டு இரட்டிப்பாக இரண்டு ரூபாய் காணிக்கை கொடுத்தான். கொடுக்கல், வாங்கல் தொடர்ந்தது. பத்தாம் நாள் பத்தாயிரத்திற்கு பதிலாக 512 ரூபாயைக் காணிக்கையாக அளித்தான். 15ம் நாள் வந்தது. பத்தாயிரத்தை விட காணிக்கை தொகை அதிகமானது. பக்தரிடம் 16,384 ரூபாய் கொடுக்க நேர்ந்தது. இரவெல்லாம் தூக்கம் வராமல் கோடீஸ்வரன் தவித்தான். விடிந்ததும் பக்தரின் வீட்டுக்கு ஓடினான். “சாமி.... என்னை மன்னிச்சிடுங்க! விபரம் தெரியாம காளிக்கு காணிக்கை தர்றதா சத்தியம் பண்ணிட்டேன்” என்று அழுதான். பக்தர், ‘பக்தி செய்தா பணம் கொட்டுமா.... உழைக்காத யாருக்கும் கோடீஸ்வர யோகம் உண்டாகாது. இனியாச்சும் உழைச்சு வாழப் பழகு. காளியாத்தா ஒரு போதும் உன்னை தண்டிக்க மாட்டா பயப்படாதே” என்றார். வாங்கிய பணத்தை எல்லாம் விவசாயியிடம் திரும்பக் கொடுத்த கோடீஸ்வரன் உழைத்து வாழ முடிவெடுத்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar