Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தர்மத்தின் தீர்ப்பு
 
பக்தி கதைகள்
தர்மத்தின் தீர்ப்பு

அரசன் உக்கிரபுத்தன். ’கர்ணன் மீண்டும் பிறந்து விட்டான்’ என்று சொல்லும் அளவுக்கு, தான தர்மங்கள் செய்பவன். தினமும் ஆயிரம் பேருக்காவது அன்னதானம் செய்யாவிட்டால் அவனுக்கு தூக்கம் வராது. அதுவும் அவன் கைகளாலேயே தானம் செய்வதில் அவனுக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம் கிடைத்து வந்தது. அப்படித்தான் அன்றும் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன... வானத்தில் ஒரு கருடன், பாம்பு ஒன்றை தன் கால்களால் கவ்வியபடி பறந்து சென்று கொண்டிருந்தது. கருடனின் கால்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தது பாம்பு. அப்போது அதன் வாயிலிருந்து விஷம் வழிந்து கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த விஷம், அரசர் வைத்திருந்த உணவுப் பாத்திரத்திற்குள் விழுந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை.

அன்னதானம் தொடங்கியது. மன்னர் உணவை அள்ளி தட்டில் வைத்து விநியோகித்தார். விஷம் விழுந்த உணவைப் பெற்றுக் கொண்டு, மன்னரைப் புகழ்ந்தபடி சென்றார் ஒரு அந்தணர். அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து உணவை சாப்பிட்டதுமே, விஷம் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அந்தணருக்கு கண்கள் இருண்டன. தொண்டை கவ்வியது; தலை சுற்றியது. என்ன நடக்கிறது என்று சுற்றி இருந்தவர்கள் சுதாரிக்கும் முன் அந்தணர் சரிந்து தரையில் விழுந்தார்.  செய்தி தெரிந்து ஓடி வந்த மன்னர் கண் முன்னர் துடிதுடித்து இறந்தார் அந்தணர். தானமளித்த அன்னம் சிதறிக் கிடந்தது. மன்னருக்கோ கண்கள் குளமாயின. செய்வதறியாத அவர் தரையில் மண்டியிட்டு அழுதார். ’அந்தணரின் மரணத்திற்கு நானே காரணம்’ என்று கதறினார்.  அரசவை அந்தணர்கள் அவரை தேற்றினர். ஒருவாறாக சமாளித்து மனதை திடப்படுத்திக் கொண்டு, சம்பவம் குறித்த விசாரணைக்கு கட்டளையிட்டார். யாருக்கும் எதுவும் புலப்படவில்லை.

இந்த நேரத்தில் தர்மதேவதைக்கு ஒரு சந்தேகம்... ’அந்தணர் இறந்த பாவம் யாரைச் சேரும்?’ என்பது தான் அது. அவளும் குழம்பினாள். நாட்கள் சில நகர்ந்தன. வெளியூர் அந்தணர்கள் சிலர் மன்னரிடம் தானம் பெற காட்டுவழியாக வந்தனர். வழியில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த கிழவி ஒருத்தியிடம் வழி கேட்டனர்.  “அம்மா, நாங்கள் வெகு தொலைவிலிருந்து வருகிறோம். உங்கள் மன்னரைச் சந்தித்து தானம் பெற விரும்புகிறோம்.  எங்களுக்கு வழிகாட்டுங்கள்?” என்றனர்.  கிழவி, வழி சொன்னதோடு விட்டிருக்கலாம். ஆனால் அவள் வாய் சும்மாயிருக்கவில்லை. “எங்கள் மன்னர் மிக நல்லவர் தான். ஆனால், தானம் கொடுத்த பிறகு, தானம் பெற்றவர்களை கொன்று விடுவார்!” என்றாள். இதைக்கேட்டு பயந்த அந்தணர்கள் வந்த வழியே ஊருக்கு கிளம்பினர்.  அடுத்த நொடியே விதியும் கிளம்பியது... கிழவியின் கதையை முடிக்க.  மன்னரைப் பற்றிய தவறான செய்தி பரப்பிய கிழவியே அந்தணரின் பாவக்கணக்கை தீர்க்க சரியானவள், என்று தர்மதேவதை முடிவு செய்து விட்டாள். அதன்படி அந்தணர் இறந்த பாவம் முழுவதும் கிழவியை சேர்ந்தது.  ’மற்றவர்களை விமர்சனம் செய்தால் பாவம் நம்மை தீண்டும். ஒருவர் செய்தது தவறு என்றாலும் அதைப் பிறரிடம் புறம் பேசினால் பாவத்திற்கு ஆளாக நேரும்’ என்று கிழவிக்கு மரண தண்டனை தீர்ப்பு எழுதி, தன் பேனா முனையை கூர் தீட்டிக் கொண்டது தர்மம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar