|
மகாலட்சுமிக்கு சுயம்வரம் என்றால் ஏழு உலகங்களும், தேவாதி தேவர்களும் திரளக்கூடும் இல்லையா? முப்பத்து முக்கோடி தேவர்களும் கழுத்தை நீட்டினர். ஆனால் மகாலட்சுமி ஒரு நிபந்தனை வைத்தாள். ’என்னை எவன் விரும்பவில்லையோ, அவனைத்தான் மணப்பேன்’ என்றாள். ’அவளை விரும்பாதது மாதிரி’ தேவர்களால் நடிக்க கூட முடியவில்லை. ஏழு உலகங்களிலும் நடந்தாள் மகாலட்சுமி. கடைசியில் பாற்கடலுக்கு வந்தாள். அங்கே பள்ளி கொண்டிருந்தது ஒரு கரிய திருமேனி. மகாலட்சுமியை அது லட்சியம் செய்யவே இல்லை. “என்ன, உங்களுக்கு ஆசையே இல்லையா?” என்று கேட்டாள் மகாலட்சுமி. “நீ யாரம்மா?” என்று கேட்டது திருமேனி. “நான் தான் மகாலட்சுமி!” என்றாள். “அப்படியென்றால்...?” என்று அது திருப்பிக் கேட்டது. மகாலட்சுமிக்கு சிரிப்பு வந்தது. “உன்னை அறிவது தான் என் வேலையா? உலகத்தில் எனக்கு வேறு வேலை இருக்கிறது!” என்றார் கரியமேனியனான திருமால். அவரது கழுத்தில் மாலையிட்டு அருகில் அமர்ந்தாள் மகாலட்சுமி. திருமால் எதற்கும் மயங்குவதில்லை. மனிதனும் அப்படி இருந்தால் அவனது மதிப்பு உயரும் என்பதை இந்தக்கதை சொல்கிறது! |
|
|
|