Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மகிழ்ச்சி தந்த மந்திர சொல்
 
பக்தி கதைகள்
மகிழ்ச்சி தந்த மந்திர சொல்

குழந்தையுடன் தன் காலில் வந்து விழுந்த பெண்ணை வியப்புடன் பார்த்தார் பரத்வாஜ முனிவர். அதற்குள் அந்தப் பெண்ணுடன் வந்தவள் பேசத் தொடங்கினாள். “சுவாமி! இவர் அயோத்தி நாட்டு அரசி மனோரமை. வேட்டையாட சென்ற இடத்தில் சிங்கத்தால் மன்னர் கொல்லப்பட்டார். இது தான் சமயம் என்று உறவினர்கள் சதியில் ஈடுபட்டனர்.  அரசியையும் இந்த குழந்தை சுதர்சனனையும் கொல்ல முயன்றனர்.  அவர்களிடம் தப்பித்து  உங்களிடம் அடைக்கலமாக வந்திருக்கிறோம். நான் இவர்களின் பணிப்பெண்” என்றாள்.

முனிவருக்கு இரக்கமுடன் “அம்மா! கவலைப்படாதே! அம்பிகை உன்னைக் காப்பாற்றுவாள். குழந்தை சுதர்சனனை பொறுப்புடன் வளர்த்து வா! எதிர்காலத்தில் இவனே அயோத்தியின் வருங்கால மன்னன்” என வாழ்த்தி அடைக்கலம் கொடுத்தார்.  மனோரமை மனதில் நம்பிக்கை மலர்ந்தது. நிம்மதியுடன் ஆஸ்ரமத்தில் தங்கினாள். அதிகாலையில் எழுவது, நீராடுவது, நந்த வனத்தில் பூ பறிப்பது, தொடுப்பது, ஆஸ்ரமத்தை தூய்மை செய்வது, அம்பிகையை பூஜிப்பது என அன்றாடப் பணியில் ஈடுபட்டாள். அவளது மகன் சுதர்சனன் ஐந்து வயதை அடைந்தான்.  ஒருநாள் ஆஸ்ரமத்திலுள்ள சிறுவர்களுடன் விளையாடிய போது அவ்வழியாகச் சென்ற பேடி ஒருவனை பார்த்து “க்லீபா! இங்கு வா!” என கூப்பிட்டான்.

’க்லீபன்’ என்னும் சொல்லும், பெயரும் சுதர்சனனைக் கவர்ந்தது. இப்பெயருக்குரிய மந்திரமான ’க்லீம்’ என உச்சரிக்க மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி படரக் கண்டான். ’க்லீம்’ என்பது மன விருப்பத்தை நிறைவேற்றும் மந்திரம் அது. உண்ணும், உறங்கும் நேரம் போக மற்ற நேரம் எல்லாம் மந்திரத்தை சொல்லத் தொடங்கினான்.

சுதர்சனனுக்கு வயது பதினொன்று ஆன போது பூணூல் அணியும் சடங்கு நடந்தது. பரத்வாஜ முனிவர் வேதம், வில்வித்தைகளை கற்றுத் தர ஆரம்பித்தார். கலைகள் கற்றாலும் அவனது ஆழ்மனம் மந்திரம் ஜபிப்பதை நிறுத்தவில்லை. ஓய்வு நேரத்தில் ஒருநாள்  கங்கைக்கரையில் உலாவிக் கொண்டிருந்தான்.  தன்னை மறந்து மந்திரம் ஜபித்த நிலையில் அவன் எதிரில் அம்பிகை காட்சியளித்தாள். அவனுக்கு ஆசியளித்து வில், எடுக்க எடுக்க குறையாத அம்பறாத்தூணி, வஜ்ரகவசம் ஆகியவற்றை வழங்கி மறைந்தாள்.

அக்காட்சியை  காசி மன்னரின் தூதர்கள்  கண்டனர் அவனது அழகும், இளமையும் அவர்களை மிக கவர்ந்தது. அரண்மனை போனதும் இளவரசி சசிகலாவிடம், கங்கைக்கரையில் மன்மதன் போல அழகன் சுதர்சனனைக் கண்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் சசிகலாவின் கனவில் அம்பிகை தோன்றினாள். சசிகலா! நீ கேள்விப்பட்ட பேரழகன் சுதர்சனன் அயோத்தி நாட்டு ராஜகுமாரன். என் பக்தனான அவனை மணந்து இன்பமுடன் வாழ்வாய்” என ஆசியளித்து மறைந்தாள். சில நாட்களுக்குப் பின் அந்தணர் ஒருவர் சசிகலாவிடம் வந்தார். “அம்மா! தேசாந்தரியாக ஊர் சுற்றுபவன் அந்தணன் நான்.  வரும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் பேரழகன் ஒருவனைக் கண்டேன். அவன் பெயர் சுதர்சனன்.  நீ அவனை மணந்தால் உன் வாழ்வு நலம் பெறும்” என்று கூறிச் சென்றார்.

இந்த விஷயத்தை அறியாத நிலையில், காசி மன்னர் தன் மகள் சசிகலாவிற்கு சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார்.  இந்நிலையில் பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் இருந்த முனிவர்கள் மனோரமையிடம், “மகளே! உன் மகன் சுதர்சனனுக்கு அம்பிகையின் அருள் பூரணமாக இருக்கிறது.  இழந்த நாடு மீண்டும் கைக்கு வரும் நேரம் வந்து விட்டது” என்றனர். அது கேட்ட மனோரமை மனம் மகிழ்ந்தாள்.

சசிகலாவின் சுயம்வரத்தில் பங்கேற்பதற்காக  பல நாட்டு மன்னர்களும், இளவரசர்களும் காசிக்கு வரத் தொடங்கினார். பத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்திலுள்ள சுதர்சனனும் சுயம் வரத்தில் பங்கேற்க வரச் சொல்லி  வர ஆள் மூலம் சொல்லி அனுப்பினாள் சசிகலா.  ஆனால்  மனோரமை மகனிடம், “சுதர்சனா... நம்  பகைவர்களும் காசிக்கு வர வாய்ப்புண்டு.  அங்கு செல்ல வேண்டாம்” என்று தடுத்தாள்.

“அம்மா! சசிகலாவின் கனவில் அம்பிகை காட்சியளித்து என்னை மணக்கும்படி உத்தரவிட்டிருக்கிறாள். அம்பிகையின் அருளும், பரத்வாஜ முனிவரின் ஆசியும் பெற்ற எனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்றான் சுதர்சனன். பெற்ற மனம் கேட்கவில்லை.  தன் மகனைக் காக்கும்படி அம்பிகையை வழிபட்டதோடு, ஸ்தோத்திரம் பாடினாள்.  சுயம்வரத்தில் பங்கேற்க காசிக்கும் உடன் சென்றாள்.  அங்கு சுதர்சனனைக் கண்ட பகைவர்கள் ஏளனம் செய்தனர்.  “ராஜாக்கள் இடம் பெறும் சுயம்வரத்தில் இந்தப் பரதேசி பயலுக்கு என்ன வேலை?” என கிண்டல் செய்தனர்.

ஆனால் அம்பிகை அருளால் இளவரசி சசிகலா, சுதர்சனனின் கழுத்தில் மாலையிட்டு கணவராக ஏற்றாள்.  பொறாமை மிக்க பகைவர்கள் மனம் புழுங்கியதோடு பழி தீர்க்கத் துடித்தனர். சுதர்சனனுடன் போரிட்டனர். அம்பிகை அருளால் பகைவர்களை
வெற்றி கொண்டு வீரத்தை நிரூபித்தான். மனைவியான சசிகலாவுடன் ஆஸ்ரமம் சென்று  பரத்வாஜ முனிவரிடம் ஆசி பெற்றான்.  பின் அயோத்தி நாட்டையும் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். நாடாளும் பதவி கிடைத்த பின்னும் மந்திர ஜபத்தை தொடர்ந்தான். அம்பிகை வழிபாடு அயோத்தி மக்கள் மத்தியில் புகழ் பெற்றது. 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar