|
இரண்டு நண்பர்களில் ஒருவன் கோயிலுக்குச் செல்ல, மற்றொரு வனையும் கூப்பிட்டான். அவன் மறுத்ததோடு விலைமாதுவை சந்திக்க போவதாகச் சொல்லி நடந்தான். முதலாமவன் கோயில் பஜனையில் அமர்ந்தான். விலைமாதுவை சந்தித்தவனுக்கு மனம் சலித்தது. “சே... புத்தியை கடன் கொடுத்து விட்டேனே...நண்பன் கோயிலுக்கு அழைத்தும் செல்லாமல் அற்பவிஷயத்தில் ஈடுபட்டேனே” என நொந்தான். சிற்றின்பத்தில் ஈடுபட்டவன் சலிப்பு அடைவதில் ஆச்சரியமில்லை. ஆனால் பக்தியில் ஈடுபட்டவனும் சலிப்புக்கு ஆளானான். “ நண்பன் மட்டும் சுகம் அனுபவிக்க நான் மட்டும் சந்நியாசி போல கோயிலுக்கு வந்து விட்டேனே?” என நினைத்தான். காலம் உருண்டோடியது. இருவரும் இறந்தனர். எமதூதர்கள் பஜனை கேட்டவனின் உயிரை நரகத்திற்கு எடுத்துச் சென்றனர். விஷ்ணு தூதர்கள் விலைமாதுவை சந்தித்தவனின் உயிரை வைகுண்டத்திற்கு எடுத்துச் சென்றனர். எதைச் செய்தாலும் உடம்போடு மனமும் அதில் ஈடுபட வேண்டும் என்பதை சொல்லும் கதை இது. |
|
|
|