|
அம்பை எடுத்து வில்லில் பூட்டி கச்சிதமாக குறி வைத்தான் அர்ஜுனன். அருகில் வந்த துரோணர் “அர்ஜுனா...” என்றார். “சொல்லுங்கள் குருவே” அவனது உதடு மட்டும் அசைந்தது. “உனக்கு முன்னால் நிற்கும் மன்னர்கள் தெரிகிறார்களா?” “இல்லை” “நான் தெரிகிறேனே?” “இல்லை” “மரம் தெரிகிறதா?” “இல்லை” “மரத்தில் உள்ள பறவை தெரிகிறதா?” “இல்லை” “அப்படியானால் என்ன தான் தெரிகிறது?” “பறவையின் கண் மட்டும் தெரிகிறது” “சபாஷ்...! அர்ஜுனா... உன்னைப் போல பறவையின் கண்ணை மட்டும் யாரால் குறி வைக்க முடிகிறதோ, அவரால் மட்டுமே இலக்கை வீழ்த்த முடியும். போர்க்களத்தில் மட்டுமல்ல ஆன்மிக வாழ்விலும் அப்படித் தான்! கடவுள் ஒருவரே உண்மை. மற்றதெல்லாம் பொய் என்ற இலக்கை யார் உணர்கிறார்களோ அவரால் கடவுளை அடைய முடியும்” என்றார் துரோணர். இதைக் கேட்ட சீடர்கள் அர்ஜுனனை கண்கொட்டாமல் பார்த்தனர். |
|
|
|