|
குருநாதர் ஒருவரைச் சந்தித்த அன்பன் ஒருவன், “கடவுள் உண்டு என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?” என்று அவரிடம் கேட்டான். “முதலில் உட்கார். பிறகு பேசலாம்” என்றார் குரு. அவன் அவருக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனிடம் குரு சொன்னார்; “முதலில், நீ எனது கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். பிறகுதான் உனது கேள்விக்கு நான் பதில் சொல்வேன்” வந்தவன் ஒப்புக் கொண்டான். குரு கேட்டார்; “நீ அமர்ந்திருக்கும் நாற்காலி உனக்கு இடது பக்கம் உள்ளதா, வலது பக்கம் உள்ளதா?” “என்ன கேள்வி இது? நாற்காலியின் நடுவில் நான் உட்கார்ந்திருக்கிறேன்” என்றான் அவன். இப்போது குருநாதர் சொன்னார். “கடவுள் தன்மை நிரம்பிய இந்த உலகத்தில் இருந்து கொண்டே, நாம் கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவது ஏன்?” |
|
|
|