|
ஒரு வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்கு மூன்று சேலைகளை பெற்றோர் வாங்கி கொடுத்தால், “அதிலே யாருக்கு, எது?” என்பதில் சண்டை வந்து விடும். அதுபோல சகோதரர்களுக்குள் சொத்தை பிரிப்பதில் மனக்கசப்பு வந்து விடுகிறது. காரணம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மனசிருப்பதில்லை. ஒரு முறை ஒருவர் பஸ்சின் முன்பகுதியில் உள்ள சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டு வந்தார். பாதி வழியில் பஸ்சில் ஏறிய ஒரு அரசியல்பிரமுகர் தான் உட்காருவதற்கு முன் சீட் வேண்டும் என வற்புறுத்தினார். கண்டக்டர் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. அப்போது முன்சீட்டில் அமர்ந்திருந்தவரின் காதில் மெல்லிய குரலில் கடவுள், “சீட்டை விட்டுக் கொடு! தப்பி விடு!” என்றார். பலர் முன்னிலையில் மதிப்புக் குறைவாக இருந்தாலும் கடவுளின் வழிகாட்டுதலை ஏற்று பஸ்சின் பின்புறத்தில் இருந்த காலி சீட்டிற்கு மாறி உட்கார்ந்தார். எதிர்பாராத விதமாக சற்று நேரத்தில் பஸ் விபத்திற்குள்ளாகவே அந்த பிரமுகர் பலியானார். கடைசி சீட்டில் அமர்ந்தவர் காயங்களுடன் உயிர் தப்பினார். விட்டுக் கொடுத்ததால் தானே பிழைத்தேன் என்பதை எண்ணி கடவுளுக்கு நன்றி கூறினார். இனியாவது பிறருக்காக விட்டுக் கொடுங்கள், அதிலே மறைந்திருக்கிற நன்மை ஏராளம். |
|
|
|