|
பட்டுப்புழு ஒன்று நூலால் பொறுமையாக தன் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த சிலந்திக்கு பொறாமை வந்தது. தானும் வலை பின்னி வாழ வேண்டும் என கடவுளிடம் வரம் கேட்டது. அதன் அவசரபுத்திக்கு ஏற்றாற்போல் “பட்டுப்புழுவை விட சீக்கிரமாக வலை பின்னும் திறன் பெறுவாய்” என வரமளித்தார். அதன்பின் சிலந்தி பரபரப்புடன் வலை பின்னி முடித்தது. “பட்டுப்புழுவே! இன்னுமா நூலை சுற்றிக் கொண்டிருக்கிறாய்? நான் சீக்கிரமாக வீடு கட்டியதைப் பார்த்தாயா?” என கேலியும் செய்தது. “ஆமாம்... உண்மை தான். நீ சீக்கிரம் கட்டியது போலவே, அந்த வீடும் சீக்கிரம் உடைபட்டு விடுவதை மறந்து விட்டாயே” என்றது பட்டுப்புழு. “ஏன் உன் வீடு மட்டும் உடை படாதாக்கும்?” எனச் சிலந்தி சீறியது. “மனிதர்கள் உன் வீட்டை தூசி என்று அடிக்கடி துடைத்து விடுவார்கள். ஆனால் என் கூடுகளை தங்களின் அந்தஸ்தின் அடையாளமாக பயன்படுத்துவர். பட்டுத்துணியால் ஆன ஆடைகளாக உடுத்தி மகிழ்வர். இதனால் தான் பொறுமையாக கூடு கட்டுகிறேன்.” என பதிலளித்தது. தன்நிலை அறியாமல், பொறாமையால் போட்டியிட்டது தவறு என்பதை உணர்ந்த சிலந்தி வருந்தியது.
|
|
|
|