|
குருகுலம் ஒன்றில் சீடர்கள் எதற்கும் அடங்காமல் சேட்டைகள் செய்தனர். ஒழுக்கம் என்னும் பெயரில் குருநாதர் தங்களை அடக்கியாள்வதாகக் கருதினர் சீடர்கள். உண்மையை உணர்த்த விரும்பினார் குருநாதர். வகுப்பு முடிந்த பின் மாலையில் பொழுதுபோக்காக வானில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் சீடர்கள். அவர்களிடம், ‘சீடர்களே! பட்டத்தில் நூலின் வேலை என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்?‘ சீடன் ஒருவன்,‘நூல் தான் பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு...குருவே‘ என்றான்.
‘இல்லை... நூல் தான் அதை சுதந்திரமாக பறக்க வச்சுட்டு இருக்கு‘ என்றார் குரு. சீடர்கள் பலமாக சிரிக்கவே, கத்திரிக்கோலால் நூலை வெட்டினார் குருநாதர். விடுபட்ட பட்டம் காற்றில் சுழன்றபடி பறந்து கீழே விழுந்தது. ‘ சீடர்களே! பட்டத்தின் நூல் போலத் தான் உங்களுக்கு ஒழுக்கம் என்னும் கட்டுப்பாடு! அது சுதந்திரத்தை பறிப்பதாக நினைக்கிறீர்கள்! அதிலிருந்து விடுபட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது. சீக்கிரமே தடுமாறி கீழே விழச் செய்யும். ஒழுக்கம் உங்களை வெற்றிக்கொடி கட்டிப் பறக்க வைக்கும்.‘ என்றார் குரு. இந்த உபதேசம் நமக்கும் தான்.
|
|
|
|