|
“மனிதனின் ஆயுள் நூறாண்டு என்பர். எனினும் நூறு வயதைக் கடந்தவர்கள் அதிகமில்லையே ஏன்?” எனக் கேட்டார் திருதராஷ்டிரர்.
அதற்கு அவரின் சகோதரரான விதுரர், “மனித ஆயுளை அறுக்கும் கீழ்க்கண்ட ஆறு வாளில் இருந்து விலகுபவன் 100 ஆண்டு வாழ்வான். * முதல் வாள்: கர்வம். மனிதர்களில் பலர்,
“நானே கெட்டிக்காரன்” என எண்ணுகின்றனர். தன்னிடமுள்ள குறைகளையும், பிறரிடம் உள்ள நிறைகளையும் காண்பவருக்கு கர்வம் வராது.
* இரண்டாவது வாள்: அதிகம் பேசுதல். பேச விஷயமே இல்லாத போதும் வீணாகப் பேசுபவன் வம்பை விலைக்கு வாங்குகிறான்.
* மூன்றாவது வாள் : தியாக உணர்வு இல்லாதது. பேராசை தியாக உணர்வைத் தடுக்கிறது.
* நான்காவது வாள்: கோபம். இதை வென்றவனே ஆன்மிகவாதி. கோபத்தில் தர்மம் எது? அதர்மம் எது? என்பது தெரியாது.
* ஐந்தாவது வாள்: சுயநலம். எல்லாத் தீமைக்கும் வேர்.
* ஆறாவது வாள்: துரோகம். நல்ல நண்பர்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதத்தில் செயல்படுவது.
|
|
|
|