|
பற்கள் எல்லாம் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக கனவு கண்டார் மன்னர் ஒருவர். பீதியுடன் எழுந்தவர் அரண்மனை ஜோதிடருடன் ஆலோசித்தார். பஞ்சாங்கத்தைப் புரட்டிய ஜோதிடர்,“அரசே! உங்களது மனைவி, குழந்தைகள், உறவினர் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்துவிடுவர்” என பலன் கூறினார். வெகுண்ட மன்னர், அவரை சிறையிலிட உத்தரவிட்டார். அதன் பிறகும் மனம் சமாதானமாகவில்லை. இன்னொரு ஜோதிடரிடம் கனவுக்கான பலன் கேட்டார்.
பஞ்சாங்கத்தை புரட்டிய அவர்,“நூறாண்டு காலம் வாழ்வீர்கள் மன்னா! சொந்தபந்தங்களில் நீண்டகாலம் வாழும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றார். பரிசுகள் வழங்கி கவுரவித்தார் மன்னர். இருவரும் பார்த்தது ஒரே பஞ்சாங்கம் என்றாலும், எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார் ஒருவர்; இன்னொருவரோ எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். இது தான் வித்தியாசம்.பேசும் வார்த்தைகளால் பிறர் தெளிவு பெற வேண்டுமே தவிர வருந்துவது கூடாது. |
|
|
|