|
மழைக்கால மேகங்கள் வானில் உலா வரத் தொடங்கின. அதில் இருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி விரைந்தது. “ஆ! கடல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது நான் ஒரு பொருளாகவே இல்லையே. எவ்வளவு சிறியவனாக இருக்கிறேன்” என எண்ணியது. கடல் பரப்பில் இருந்த சிப்பி ஒன்று மழைத்துளியின் பணிவைக் கண்டு வியந்தது. வானிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்ததை எண்ணி பெருமைப்படாமல், பணிவுடன் இருக்கும் மழைத்துளிக்கு கவுரவம் வழங்க விரும்பியது சிப்பி. தன் வாயைத் திறந்து மழைத்துளியை வாங்கிக் கொண்டது. சில நாட்களில் அந்த மழைத்துளி முத்தாக மாறியது. அடக்கத்திற்கு கிடைத்த பரிசு இது. அது போல் நாமும் தற்பெருமை கொள்ளாமல், அடக்கமாக இருந்தால் சிப்பிக்குள் முத்தாக ஜொலிப்போம். மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம். |
|
|
|