|
தமிழ் ஆசிரியர் ஒருவர் உணவிற்குப் பின் மாணவர்களைப் படிக்கச் சொல்லி விட்டு, மேஜை மீது தலை வைத்து தூங்கி விடுவார். ஒருநாள் மாணவர்கள், “ பணி நேரத்தில் தூங்குகிறீர்களே?” எனக் கேட்டனர். “நான் தினமும் கனவுலகம் சென்று, அங்கு ஞானிகளை சந்தித்து ஞானம் பெறுகிறேன்” என சாதுர்யமாக பதிலளித்தார். மாணவர்கள் அசந்து விடுவார்களா என்ன... அவருக்கு தக்க பாடம் புகட்ட விரும்பினர். மறுநாள் மதியம் சாப்பிட்டு முடித்ததும், வகுப்பில் எல்லா மாணவர்களும் பெஞ்சில் தூங்குவது போல கண் மூடியிருந்தனர். கோபம் கொண்ட வாத்தியார் பிரம்பால் மேஜையில் தட்ட, அனைவரும் கண் விழித்தனர். “ஏன் வகுப்பில் தூங்குகிறீர்கள்?” எனக் கேட்டார். ஒரே குரலில், “நாங்களும் உங்களைப் போல கனவுலகில் ஞானிகளை தரிசிக்க சென்றோம் ” என்றனர். அவரது முகத்தில் ஈயாடவில்லை. அதன் பின் துடிப்பானவராக மாறி, பணியில் ஈடுபடத் தொடங்கினார். |
|
|
|