|
வடலூரில் அமாவாசை என்றொரு கூலியாள் இருந்தார். கறவை நின்ற மாடுகளை வெட்டுவது அவரது தொழில். ஒருமுறை வள்ளலாரின் அருளுரையைக் கேட்டு மனம் திருந்தினார். மாடறுக்கும் தொழிலைக் கைவிட எண்ணினார். இதையறிந்து, “அமாவாசை! உனது அன்றாட வருமானம் எவ்வளவு?” எனக் கேட்டார் வள்ளலார். “சொற்பம் தான்! தினமும் மாடு அறுக்கப் போனால் எட்டணா (ஐம்பது காசு) கூலி வாங்குறேன்” என்றார். எட்டணா நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்த வள்ளலார், “இதை பத்திரமாக வைத்துக் கொள். இனி விவசாயத்தில் ஈடுபடு. கடவுளருளால் உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கும்” என ஆசியளித்தார். காணிக்கை பெற்ற அமாவாசை விவசாயப்பணியில் ஈடுபட்டு வாழ்வில் நிம்மதியடைந்தார். |
|
|
|