|
சிறுவன் ஒருவன் சாலையோரத்தில் பிச்சை எடுத்தான். அருகிலுள்ள பலகையில்,” நான் குருடன்; உதவுங்கள்” என்ற வாசகம் எழுதியிருந்தது. ஆனால் யாரும் உதவவில்லை. அவ்வழியாக வந்த நல்லவர் ஒருவர் சில்லரைக்காசுகளை கொடுத்ததோடு அருகிலுள்ள பலகையைப் படித்தார். சற்று யோசித்து விட்டு வாசகத்தை மாற்றி எழுதினார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சில்லரைகள் அவனது தட்டில் விழுந்தன. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாளவில்லை. வாசகத்தை மாற்றிய மனிதர் மீண்டும் அங்கு வந்தார். எதிர்பார்த்தது போலவே தட்டில் காசுகள் நிறைய கிடந்தன. அவரின் காலடி ஓசையை வைத்தே அடையாளம் கண்டான். ”காலையில் வந்தவர் நீங்கள் தானே? பலகையில் என்ன எழுதினீர்கள்?” எனக் கேட்டான். ”இன்று மிக அழகான நாள். ஆனால் அதை என்னால் பார்க்க முடியாது” என எழுதினேன் என்றார் அவர். இந்த வாசகம் சிறுவனின் பார்வைக் குறைபாட்டை தெரிவித்தாலும், மற்றவர்களுக்கு பார்வை இருப்பதையும், அவர்களால் உலகை பார்க்க முடியும் என்பதையும் நினைவுபடுத்துகிறது. எதையும் நேர்முகமாக எதிர்கொள்ளுங்கள். மாற்றி யோசித்தால் வாழ்வு அழகாகும். |
|
|
|