காட்டுக்குச் சென்ற அரசர் வேட்டைநாயுடன் புறப்பட்டார். மும்முரமாக வேட்டையில் இருந்த போது, அங்குமிங்கும் ஓடிய நாய் வழிதவறியது. அங்கு புலி ஒன்று வருவதைக் கண்ட நாய் திகைத்தது. தன் எதிரில் கிடந்த சில எலும்புத் துண்டுகளை பார்த்த நாய், சட்டென முதுகை காட்டியபடி அமர்ந்தது. புலி அருகில் வந்ததும், ”ஆகா...புலியின் மாமிசம் பிரமாதம். இன்னும் ஒரு புலி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என நாக்கைச் சுழற்றியபடி திரும்பியது.
இதைக் கேட்ட புலி, ’ தப்பினால் போதும்’ என பின்வாங்கியது.
இதை மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கவனித்தது. நாயைக் காட்டிக் கொடுத்து நல்ல பெயர் வாங்கலாம் என எண்ணியபடி, புலியை நோக்கி விரைந்தோடியது. அதன் எண்ணம் நாய்க்கு புரிந்தது. உறுமிய புலி, ”இப்போதே பாடம் புகட்டுகிறேன்” என்று சொல்லியபடி நாயை நோக்கி விரைந்தது. புலியும், குரங்கும் வருவதைக் கண்ட நாய் சுதாரித்துக் கொண்டு காத்திருப்பது போல பாசாங்கு செய்தது. ”இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே” என்றது சாதுர்யமாக. அதன்பின் நடந்ததை சொல்லத் தேவையில்லை...புலியின் கோபம் குரங்கின் மீது திரும்பவே, நாய் உயிர் தப்பியது.