|
ஒருமுறை புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். வழியில் ஏரி தென்பட்டது. தண்ணீர் கொண்டு வரும்படி சீடர் ஒருவரை அனுப்பினார் புத்தர். அந்த நேரத்தில் மாட்டு வண்டியுடன் ஒரு விவசாயி ஏரிக்குள் இறங்கியதால் தண்ணீர் கலங்கி விட்டது. ” கலங்கிய நீர் குடிப்பதற்கு பயன்படாதே?” என்ற கவலையுடன் திரும்பினான் சீடன். சற்று நேரம் கழிந்தபின், புத்தர் அந்த சீடரை மீண்டும்அனுப்பினார். கலங்கிய நீர் தெளிந்திருந்தது. சீடர் மகிழ்ச்சியுடன், தண்ணீரை எடுத்துக் கொண்டு கிளம்பினார். ”தண்ணீர் தெளிய என்ன செய்தாய்?” என புத்தர் கேட்க, ”ஒன்றும் செய்யவில்லை. அது தானாகவே தெளிந்து விட்டது” என்றார் சீடர். ” அதன் போக்கிலேயே விட்டதும் தெளிந்தநீர் கிடைத்தது அப்படித்தானே?” ”ஆமாம் சுவாமி” மனமும் அப்படிப்பட்டதே. குழப்பத்தில் இருக்கும் போது அமைதி காத்தால், அது தானாக சரியாகி விடும்.
|
|
|
|