|
சோம்பேறி ஒருவன் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான். களைப்பு தீர ஒரு மரத்தடியில் அமர்ந்தான். நினைத்ததை நிறைவேற்றும் சக்தி கொண்ட கற்பக மரம் அது. தாகத்திற்கு தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைத்தான். மரத்தடியில் சிறு குழியில் தண்ணீர் பெருகுவதைக் கண்டான். தாகம் தீர குடித்தான். சற்று நேரத்தில் பசி எடுக்கவே, உணவு கிடைத்தால் சாப்பிடலாமே என நினைத்தான். மரத்தில் பழங்கள் உதிர்ந்தது. சாப்பிட்டான். தூக்கத்தால் கண்கள் சொக்கியது. “அடடா... கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என
எண்ணியதும், கட்டிலும் வந்தது; படுத்துக் கொண்டான். கால்களைப் பிடித்து விட இளம்பெண் இருந்தால் வசதியாக இருக்குமே என நினைக்க, அதுவும் உடனே நடந்தது. அயர்ந்து தூங்கினான். சற்று நேரத்தில் கண் விழித்தான். “நினைச்சது எல்லாம் நடக்குதே, ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ...அது வந்து என்னைத் தின்றால்...?” என பயந்தான். அதுவும் உண்மையானது; பிசாசு அவனை கடித்து தின்றது. எப்போதுமே நல்லதை நினைத்தால் கடவுள் அருளால் நல்லதே நடக்கும். |
|
|
|