|
பழம் என நினைத்து, உதிக்கும் சூரியனை தின்னப் புறப்பட்டான் பாலகன் அனுமன். “வானர சிறுவனான நீ என்னை நெருங்கினால் என்னாவாய் தெரியுமா? சாம்பலாகி விடுவாய்” என எச்சரித்தார் சூரியன். அனுமன் பொருட்படுத்தாமல் நெருங்கினான். உடனே அங்கு வந்த இந்திரன் வஜ்ராயுதத்தால் அனுமனை அடிக்க, வலி தாங்காமல் கீழே விழுந்தான். இதைக் கண்ட அனுமனின் தந்தை வாயுதேவனுக்கு கோபம் வந்தது. இந்திரனுடன் சண்டைக்கு ஆயத்தமானான். இருவரையும் சமாதானப்படுத்திய சூரியன், சகல வித்தைகளையும் அனுமனுக்கு கற்றுத் தர முன்வந்தார். அதற்கு நிபந்தனையாக,“அனுமனே! நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் என்னால் ஓரிடத்தில் அமர்ந்து கற்றுத் தர முடியாது. என் வேகத்துக்கு ஈடுகொடுத்து வந்தால் மட்டுமே கற்பது சாத்தியம்” என்றார் சூரியன்.
தன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற ஆணவம் அவரது பேச்சில் தொனித்தது. நிபந்தனையை ஏற்ற அனுமன் வேகமாக சூரியனுடன் சுழன்று கலைகளைக் கற்று முடித்தார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, உன்னிலும் உயர்ந்தவர் உலகில் உண்டு என்ற பழமொழிகள் இதனடிப்படையில் தான் உருவானது.
|
|
|
|